சண்டேன்னா மூணு..! கூட்டணி..குழப்பம்..விருந்து..!

ந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா...? இன்னும் எத்தனை நாளம்மா..??
 
னிக்கிழமையன்று, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு -2 (குழப்பங்களின் மொத்த வடிவம்) பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்ததை ஒட்டி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதம மந்திரியின் இல்லத்தில் ஒரு விருந்து கொடுப்பதாக ஏற்பாடாகியிருந்தது. கூட்டணிக் குழப்பத்தின் "சாதனைகளை" எடுத்துச் சொல்லும் விதமாக இந்த விருந்து ஏற்பாடு செய்யப் பட்டது. மங்களூரில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து, சோனியாவின் ஒப்புதலோடு இந்த விருந்து ஏற்பாடு ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறதாம்!

ந்த ஓராண்டில், ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு அப்படி என்னதான் பெரிதாக சாதித்து விட்டது? கொஞ்சம் பார்க்கலாமா?

விவசாயத் துறையை முதலில் எடுத்துக் கொள்ளலாம்.

நான்கு சதவீத வருட வளர்ச்சி வீதம் என்று இலக்கு இருக்கிறது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, விவசாயத் துறை வளர்ச்சி  இரண்டு சத வீதத்தைக் கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை! விவசாயத் துறை அமைச்சர் பவார் என்ன செய்கிறார்? என்ன சொல்கிறார்? 

ரத் பவார், கிரிக்கெட் விளையாட்டில் புகுந்து "விளையாடுவதைத் தவிர" வேறு ஒன்றும் பெரிதாக சாதித்து விட்டதாக சொல்ல முடியாது! அவருடைய சொந்த மாநிலம், மகாராஷ்ட்ராவில், விதர்பா பகுதியில் விவசாயிகளுடைய தற்கொலை வருடாவருடம் அதிகரித்து வருகிறது. ஜனாதிபதிக்கும், பிரதம மந்திரிக்கும் நோட்டரி பப்ளிக் முன்னால் ஸ்டாம்ப் பேப்பரில், தாள முடியாத கடன் சுமையினால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழி தங்களுக்கு இல்லை என்பதை எழுதி வைத்து விட்டு  இந்தத் தற்கொலைகள் நடக்கின்றன என்பது அமைச்சருக்கும் சரி, அரசுக்கும் சரி தகவல் தெரியுமா, கவலைப் படுகிறார்களா என்பது பெரிய கேள்விக் குறிதான்!

ப்போது இந்த செய்திகள்?

வனாவது வேலை வெட்டி இல்லாத பத்திரிகைக்காரன் படம் ஆதாரத்துடன் செய்தி போட்டு விட்டால் மட்டும் போதுமா? செய்திகளையும், செய்தியாளர்களையும் எப்படி விலைக்கு வாங்குவது என்ற கலை அரசியல் வியாதிகளுக்குத் தெரியாதா என்ன! 


சென்ற தேர்தலில், ஆந்திராவிலும், மஹாராஷ்ட்ராவிலும் வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டிய விஷயம் செய்தியாளர்களுக்கு, படிப்பவர்களுக்கு  வேண்டுமானால் ஒரே ஒரு நாள் செய்தியாக இருந்து விட்டுப் போய்விடலாம்! நாலாவது தூண் கதையில் எண்டமூரி வீரேந்திரநாத் இதைப் புட்டு வைத்திருப்பதை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்! அரசியல் வியாதிகள் தழைப்பதும் பிழைப்பதும்  இந்த மாதிரித் தில்லாலங்கடி வேலையில் தானே!

மல்நாத் என்று ஒரு அமைச்சர்! ஒவ்வொரு நாளும் இருபது கிலோமீட்டர் புதிய நெடுஞ்சாலையை அமைப்பது  என்பது இவர் அடித்துக் கொண்ட ஜம்பம்! தம்பட்டம்! எவ்வளவு புதிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டது என்பதை  அமைச்சரிடமே கேட்டால், தன்னுடைய தம்பட்டத்தில் ஒரு சிறுபகுதியைக் கூட நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஒத்துக் கொள்வார்.

சுசில் குமார் ஷிண்டே என்று இன்னொரு அமைச்சர்! மின்சார பற்றாக்குறை ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட மிக மோசம்! பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-2012) மின்சார உற்பத்தி, நிச்சயிக்கப் பட்ட இலக்கில் பாதி  கூட இருக்காது என்று தெரிகிறது! இதற்குப் பேர், திட்டமிடுதல்! ஐந்தாண்டுத் திட்டமாம்! திட்டமிடுகிறபடி எதுவுமே இங்கு எப்போதுமே நடக்காது என்பது தெரிந்துமே, குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்க முடியாது என்று தெரிந்துமே இந்தக் கூத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கிறது! 

ஊழல்! ஊழல்!! ஊழல்!!!

மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில் லொள்ளு யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, நம்மூர் பசுநேசன் மாதிரிக் காமெடிக்குப் பஞ்சமில்லை! வெர்ஷன் இரண்டில், சீன் மாறி, ரிவால்வர் ரீட்டா மாதிரி ஜோல்னாப் பையுடன் மம்தா பானெர்ஜி ரயில்வே அமைச்சராகப் பதவியேற்ற பிறகுதான்  ரயில்வேத் துறை சீரழிய ஆரம்பித்தது என்று சொல்வது கொஞ்சம் ஓவர்! அதற்கு முன்னாலும் அப்படித் தான் இருந்தது! என்ன, அம்மையார், அடிக்கடி ஜோல்னாப் பையுடன் மார்க்சிஸ்ட் கட்சியுடன் மல்லுக் கட்ட மேற்கு வங்கத்திலேயே டேரா போட்டு விடுவதில், லோகல் பாலிடிக்ஸில் மட்டுமே கவனம் செலுத்துகிற ஆப்சென்டீ அமைச்சர் என்ற பெயரை வாங்கியிருக்கிறார்!

மேற்கு வங்கத்து  பானெர்ஜிக்கு மட்டும் தான் ஆப்செண்டீயாக  இருக்கத் தெரியுமா? வாலொடு தோன்றிய மூத்த குடியின் கீர்த்தி என்னாவது? இங்கே ரசாயன, உரத்துறை அமைச்சரும் அப்படித்தான் இருக்கிறார்!  AWOL  Absent without Leave என்று சுருக்கமாகச் சொல்வார்கள்! மதுரைக்கார அமைச்சரும் அப்படி  AWOL தான் என்று நாடாளுமன்றத்திலேயே, சபாநாயகர் முறைப்படி அறிவித்துவிட்டு, அனுமதியுடன் வெளிநாடு போகவில்லை என்று அறிவிக்கிற அளவுக்குப் பிரசித்தம்!

தனால் என்ன! விவசாயிகளுக்கு உரம் கிடைக்கிறதோ இல்லையோ, உதிரிக் கூட்டணிக் கட்சிகளுக்கு நல்ல சத்துள்ள உரம் என்றைக்கும் இங்கே உத்தரவாதம்!

மீபத்தில் மாயாவதிக்கு அடித்த லக்கி ப்ரைஸ் மாதிரி, வெட்டுத் தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, மாயாவதி மீது சி பி ஐ தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கு வாபஸ் பெறப் பட்டதும், திரும்பின இடமெல்லாம் மாயாவதி சிலை தான் என்ற கேணத் தனமான ஊழலைத் தட்டிக் கேட்ட நிலையை மாற்றிக் கொண்டு தட்டிக் கொடுத்ததுமே நல்ல உதாரணங்கள்! வெர்ஷன் ஒன்றில், இப்படித்தான், சமாஜ் வாதி பார்டி அமர் சிங் மீதிருந்த வழக்கை எல்லாம் வாபஸ் வாங்கிக் கொண்டு,  இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தைக் கமுக்கமாக நிறைவேற்றிக் கொண்ட கூத்து நடந்தது!

3G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு நல்ல தொகை கிடைத்திருக்கிறது! சந்தோஷப் பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை! 2G ஏலத்தில் ஆ!ராசா என்று வாயைப் பிளக்க வைக்கிற விதத்தில் நடத்திய ஊழலைத் தட்டிக் கேட்கிற தைரியம் காங்கிரஸ் கட்சிக்கோ, டம்மிப் பீஸ் பிரதம மந்திரிக்கோ இருந்ததே இல்லை!
ஸ் எம் கிருஷ்ணா! கர்நாடகா மாநில முதலராக இருந்து, காங்கிரசின் கோஷ்டிக் கலாசாரத்தில் ஊறிப் போன புள்ளி! ஒரு கட்டத்தில் ரிடைர் ஆனா ஆசாமிகளுக்கு என்றே ஒதுக்கப் படும் கவர்னர் பதவியை கொடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உட்கார்த்தி வைத்தார்கள்! என்ன போதாத காலமோ, இந்த மனிதர் இன்றைக்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்! ஐ மு கூட்டணிக் குழப்பத்தின் உச்ச பட்சமான காமெடியாக இதைச் சொல்லலாம் என்றால், சசி தரூர் டிவிட்டரில் டிவிட்டியே சண்டைக்கு வருவார்!

மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில் கொஞ்சம் நல்ல பேரை எடுத்திருந்த பிரபுல் படேல், இப்போது ஐ பி எல் விவகாரத்தில் சிக்கியதும் சமாளிக்கப் போராடிக் கொண்டிருப்பதும்  வெர்ஷன் டூவின் சாதனை என்று சொல்லலாமா?

னேகமாக, ஒரு சிலரைத் தவிர்த்துச் செயல்படுகிற அமைச்சர்களே ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 இல் இல்லை! செயல்படுகிற மாதிரித் தோற்றமளிக்கிற  சிலபேருடைய செயல்பாடுகள் எப்படியிருக்கிறது என்று கொஞ்சம் பார்ப்போமா?

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்!

பில் சிபல்! மனிதவளத் துறையில் கொஞ்சம் அக்கறையோடு செயல் படுகிற மாதிரி ஒரு தோற்றம் இருக்கிறது. ஐ ஐ டி கள், ஐ ஐ எம் கள் , வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் என்று மனிதவளம், கல்வித் துறையில் அதிகக் கவனத்தோடு செயல்படுகிறார். எட்டு வருடங்களுக்கு முன்பே  பதினான்கு வயது வரை அடிப்படைக் கல்வியைப் பெறுவது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சட்டவரைவு இருந்த போதிலுமே கூட, இந்த வருடம் ஏப்ரல் முதல் தேதியன்று தான் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. 

னியார் கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக்கு ஒத்துழைக்கப் போகின்றன என்பதைப் பொறுத்துத் தான் இந்த அடிப்படை உரிமை அமலுக்கு வருமா, அல்லது ஏப்ரல் முதல் தேதி முட்டாள்கள் தினமாக இருப்பது போல ஜனங்களை முட்டாளடிக்கிற இன்னொரு அறிவிப்பாகவே நின்றுவிடுமா என்பது தெரிய வரும். 

ஜெயராம் ரமேஷ்! சுற்றுச் சூழல் விவகாரத்தில் இந்திய நிலையைத் தெளிவாக அறிவித்த, சொதப்பாமல் செயல் பட்ட அமைச்சர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரி விவகாரம் கொஞ்சம் சறுக்கல்! சீனாவைக் குறித்து  உள்துறை அமைச்சகம் அளவுக்கு அதிகமான சந்தேகக் கண்ணோடு செயல்படுவதாக, சில காலத்துக்கு முன்னால், சீனாவில் பேசி, பானா சீனா கண்ணைக் கசக்கிக் கொண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தியது கொஞ்சம் பெரும் சறுக்கல்! 

ப்புறம்  அபிமானத்துக்குரிய சால்வை அழகரைப் பற்றிச் சொல்லாவிட்டால் எப்படி!

ஞ்சள் துண்டு தலைவர் ,நேற்றைய நாட்களில் பானா சீனாவை   "சிவகங்கைச் சின்னப் பையன்!" என்று அனுபவமோ முதிர்ச்சியோ இல்லாதவர் என்பதை நக்கலாகச்  சொன்னது சரியாகத் தான் இருக்கிறது!சால்வை அல்லது துண்டு எல்லாம் போர்த்திக் கொண்டதால் மட்டுமே  மஞ்சள் துண்டு போர்த்திக் கொண்டிருப்பவர்  போல சாமர்த்தியம் வந்து விடுமா என்ன?

ப்படி இந்தப் பதிவில் எழுதியிருந்ததை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபித்தே தீருவது என்று சால்வை அழகர் பானா சீனா கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது மாதிரித் தான் தெரிகிறது! 

தெலங்கானா தனிமாநிலக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படுவதாக நள்ளிரவில் அறிவித்தது... பிரச்சினை பெரிதாகி கொதிநிலைக்குப் போனவுடன் அதுவரை ஆட்டம் காண்பித்துக் கொண்டிருந்த பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணனையே ஆட்டம் காண வைத்து மேற்கு வாங்க கவர்னராகப் போக வைத்தது.... மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யாவிடம்  ...the buck stops here  என்று இளைய தளபதி படத்துக்குப் படம் விரலை நீட்டி பன்ச் டயலாக் விடுகிற மாதிரி மாவோயிஸ்டுகள் பிரச்சினைக்கு மாநில அரசு தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், அல்லது பொறுப்பானவர் யார் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும் என்று பேசியது.... 

மாவோயிஸ்டுகளை ஓராண்டிற்குள் ஒடுக்குவேன் என்று சபதம் போட்ட அடுத்த மூன்றாவது நாளில் தண்டவதே என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் 76 CRPF வீரர்களைப் படுகொலை செய்தவுடன், முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு  ராஜினாமா நாடகம் நடத்தியது.....  இப்படி ஒவ்வொரு செய்தியிலும் கலக்கிக் கொண்டிருப்பவரைப் பற்றி இங்கே சொன்னது நினைவு வருகிறதா?



க, குழப்பக் கூட்டணியின் ஓராண்டு நிறைவில் இந்திய ஜனங்கள் பெருமைப் பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை!



தேடியுனைச் சரணடைந்தேன்-தேச முத்துமாரி!
கேடதனை நீக்கிடுவாய்! கேட்ட வரம் தருவாய்!
 

ன்று ஆண்டவனைப் பிரார்த்திக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கிறதா?
 

தெரிந்தால் பின்னூட்டத்தில் வந்து சொல்லுங்களேன்!

பதிவின் தற்போதைய நிலவரம்: அப்டேட்!
 

ஐ மு கூட்டணிக் குழப்பன் வெர்ஷன் ஒன்று மற்றும் வெர்ஷன் இரண்டில் பிரதமர் பதவியை வகிக்கும் மன்மோகன் சிங் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூடப் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததுமில்லை, அவர்களுடைய கேள்விகளை எதிர்கொண்டதுமில்லை என்பது சாதனையா, சோதனையா?

இன்றைக்கு இருபத்துநான்காம் தேதி முதல்முறையாக மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களைச் சந்தித்து  ஐ மு கூட்டணிக் குழப்பம வெர்ஷன் இரண்டின் சாதனை/சோதனை  ரிபோர்ட் கார்டைத் தரப்போகிறாராம்!


இந்திய அரசியலில், எல்லாமே இங்கே தமாஷாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது!

இங்கே இருக்கும் படங்கள் அனைத்தும் இணையத்தில் பெறப்பட்டவை! உரிமைகள் அனைத்தும் அதை உருவாக்கியவர்களுக்கே!




2 comments:

  1. ஒவ்வொருத்த‌ரையும் பிச்சு உதறியிருக்கீங்க‌

    ப‌த‌வி சுக‌ம் ம‌ட்டுமே முக்கிய‌ம்னு இருக்க‌ற‌ இந்த‌ மாதிரி அமைச்ச‌ர்க‌ளிட‌த்தில், நாட்டுக்கு ஏதாவ‌து ந‌ல்லது செய்வார்க‌ள்னு எதிர்பார்த்தா அது ந‌ம்ம‌ த‌ப்புங்க‌

    ReplyDelete
  2. திரு. ரகு!

    எழுதியதைப் படித்துப் பாராட்டியதெல்லாம் சரி! அப்புறம், என்ன செய்யப் போகிறோம்? அது மிகவும் முக்கியம், இல்லையா?

    பதவி சுகம் கண்டவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை என்பது தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரிந்து தான் இருக்கிறது. ஆனால், என்ன செய்வது என்பது மட்டும் தெரியவில்லை! மாற்றத்தை விரும்புகிறவன், முதலில் பழக்கத்தின் அடிமைகளாகவே இருந்துவிடுகிற சோம்பேறித்தனத்தில் இருந்து விடுபட்டாக வேண்டும்! நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்று என்று சோம்பிக் கிடக்கிறவர்களுக்கு சுதந்திரம் இல்லை!

    ஒரு தீபத்தைக் கொண்டு, பத்து, நூறு, ஆயிரம் என்று இன்னும் அதிக தீபங்களை ஏற்ற முடிவதுபோல,நியாயமான விஷயங்களை அடுத்தவருக்கும் எடுத்துச் சொல்கிற வேலை, அதை நம்மால் செய்ய முடியும்!

    செய்ய முடியும் தானே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!