உலகக் கோப்பையும்....! இந்தியாவின் பிரபலமான உதை பந்தாட்டமும்....!


தென் ஆப்பிரிக்காவில் நேற்று முதல் தொடங்கிய கால் பந்து உலகக் கோப்பை விளையாட்டின் மீதான சுரம் உலகம் முழுவதும் பரவியாயிற்று இங்கே தமிழ்நாட்டில் ஹிந்து நாளிதழ் ஒன்று தான் பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னாலிருந்தே கால் பந்து சுரத்தைத் தொற்றி விட முயற்சித்துக் கொண்டிருந்தது. மற்ற ஊடகங்களில், நயன்தாரா பிரபு தேவா மாலை மாடிக் கொண்டது, சிரி சிரி சாமியார் உளறிய விஷயம் சிரிப்பாய் சிரிக்கிறபடி ஆனது,சசி தரூருக்குப் போட்டியாக, மச்சான்ஸ் புகழ் நமீதா டிவிட்டரிலும் வெண்கலக் கடைக்குள் யானை புகுந்த மாதிரி புகுந்தது இப்படி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த வேறு செய்தி எதுவும் கிடைக்காத பட்சத்தில், கொஞ்சம் செய்தியாக, இடமிருந்தால் புகைப்படங்களோடு வரும்! அது போதாதா?

உலகமெங்கும் கால் பந்தாட்ட சுரம் பெருகினாலும் அதிலும் இந்தியா மைனஸ் தான்!

பிரிடிஷ்காரன் வேலையற்றுப்போய்ப் பரப்பிய பதினொன்று ப்ளஸ் இரண்டு முட்டாள்கள் விளையாடுகிற  கிரிக்கெட் விளையாட்டை ஆயிரக்கணக் கணக்கானவர்கள் காசுகொடுத்து டிக்கெட் வாங்கி அரங்கத்திலும், லட்சக்கணக்கானவர்கள் தொலைக்காட்சியிலும் பார்த்து முட்டாள்களாகிக் கொண்டிருந்த போதிலும்,  இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் அரசியல் வியாதிகளால்  நலத்திட்டங்கள், போலி வாக்குறுதிகள், சட்ட மசோதாக்கள் என்று ஜனங்களை உதைத்து விளையாடுகிற சுரம் தான் எப்போதுமே நிரந்தரமான விளையாட்டாக இருக்கிறது!

அது போகட்டும்!

உலகக் கோப்பையைக் கைப்பற்ற ஒவ்வொரு நாட்டு அணியும், எந்த மாதிரி உத்தியைக் கடைப் பிடிக்கும்  என்பதைப் படம் காட்டி விளக்கும் ஒரு பதிவை இணையத்தில் பார்த்தேன்! அதில் கொஞ்சம் இந்திய சூழ்நிலைகளோடு பொருத்திக் கமெண்டுகளோடு இங்கே!





ஒரிஜினல் கால்பந்தாட்ட உத்தி பற்றிய படவிளக்கத்தைப் பார்க்க இங்கே 



முதல் படம்!காற்றடிக்கிற விதத்துக்குத் தகுந்தாற்போல, எப்போதுமே கோணலாக ஆடுகிற பிரிட்டிஷ் துரைமார்களிடமிருந்து, ஆட்சி, நிர்வாகத்தை சுவீகரித்துக் கொண்டதாலோ என்னவோ, இந்தியா அரசியலில், அரசு நிர்வாகத்தில் முற்றும் கோணலாகவே இருக்கிறது! முற்றும் கோணலாக்கியதற்காக நேரு பரம்பரைக்கு  நன்றி சொல்ல வேண்டுமா அல்லது வேறுமாதிரிச் சொல்ல வேண்டுமா?

நான்காவது படம்!பிரேசிலைப் போல இங்கேயும் குழப்பம்! ஒரே வித்தியாசம், இங்கே எப்போதுமே சேம் சைட் கோல் அடிப்பது ஒன்று தான்நம்மூர் அரசியல் வியாதிகளுக்குத் தெரியும்!

ஐந்தாவது படம்!ஆஸ்திரேலியாவுக்குச் சொன்னது விளையாட்டுக்கு! ஆனால் இங்கே இந்தியாவில், எல்லா வகையிலும் இந்திய அரசு தோற்றுப்போவதற்கு,வேறு எவருடைய உதவி ஒத்தாசையும் இல்லாமலேயே சாதித்துக் கொண்டிருப்பது நிஜம்! காங்கிரஸ் கட்சிக்கு இந்த விஷயத்தில் ஈடு இணை வேறெவரும் இல்லை!

ஆறாவது படம்!
பிரெஞ்சுத் தரப்பு இலக்கு அல்லது கோலை மறந்து விட்டதாக! இந்திய அரசியலில் இலக்கு என்பதே வேறாகத் தான் இருக்கிறது! விளையாட்டில் தோற்பதற்குக் கூட match fixing இல் தேர்ந்த சூதாடிகள் இருக்கும் நாட்டில், அரசியலில் தோற்பதற்குக் கேட்பானேன்! 
ஏழாவது படம்!இந்தியச் சூழ்நிலையில் எல்லாத் தரப்பில் இருந்தும் உதை படுகிற அந்த சிவப்புப் புள்ளி திருவாளர் இந்திய மக்களாகிய நீங்களும் நானும் தான்! அதுவாவது புரிகிறதா?
 
எட்டாவது படம்!சீனாவைப் பற்றி இப்படிச் சொல்வது தப்பு! தப்பு! அடுத்தவர்களை மோத விட்டு வேடிக்கை பார்ப்பதற்குக் கூடக் கொஞ்சம் சாமர்த்தியம் வேண்டும்!சொந்த ஜனங்களையே மோத விட்டு சாக அடித்துக் கொண்டிருக்கிற இந்திய அரசியல் கொஞ்சமாவது புரிகிறதா?

உதைபடுகிற பந்தாக இருப்பதில் இருந்து ஜனங்களாகிய நாம் விடுபடுவதும், உதைப்பவர்களை எட்டி உதைத்து வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதும் நாம்முடைய கைகளில் தான் இருக்கிறது!






5 comments:

  1. பிரிடிஷ்காரன் வேலையற்றுப்போய்ப் பரப்பிய பதினொன்று ப்ளஸ் இரண்டு முட்டாள்கள் விளையாடுகிற கிரிக்கெட் விளையாட்டை ஆயிரக்கணக் கணக்கானவர்கள் காசுகொடுத்து டிக்கெட் வாங்கி அரங்கத்திலும், லட்சக்கணக்கானவர்கள் தொலைக்காட்சியிலும் பார்த்து முட்டாள்களாகிக் கொண்டிருந்த போதிலும்,
    //////////

    அப்போ உதைபந்து விளையாடுபவன் அறிவாளினு எவனச்சும் சொன்னானா??

    ReplyDelete
  2. பிரியமுடன் பிரபு! உதைபந்தை ரசிப்பவன் முட்டாளா என்று எனக்குத் தெரியாது! அப்படி கிரிக்கெட்டில் தன்னுடைய பொழுதை வீணடித்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றிச் சொன்னது பெர்னார்ட் ஷா! அதனை நானும் அப்படியே வழிமொழிந்து இங்கே சொல்லிவிட்டு, அதுக்கு அடுத்துச் சொல்லியிருப்பதையும் சேர்த்துப் பாருங்கள்!

    இது கிரிக்கெட் முட்டாள்தனத்துக்கு ஆதரவு/எதிர்ப்புப் பதிவு இல்லை!

    ReplyDelete
  3. /செம சிரிப்பு! /

    எதுக்காம்?

    இதுக்கே இப்படி செம சிரிப்புன்னா, அடுத்த பதிவுல சிவப்புச் சேலையைக் கண்டு அலறும் காங்கிரசைப் பாத்து எப்படிச் சிரிப்பீங்க!!

    ReplyDelete
  4. ஆமா உங்க ஆதரவு எந்த டீமுக்கு? பையன் வலைத்தள போட்டி என்னாச்சு?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!