தயாநிதி மாறன் | கோப்பு படம்
இப்படி எல்லோருக்கும் கேஜ்ரிவால் மாதிரியே  விவாதம் செய்கிற ஆசை வந்துவிட்டால் இந்த நாடு தாங்குமா?

******
இரவல் தந்தவன் கேட்கின்றான்-அதை இல்லையென்றால் விடுவானா?
கண்ணதாசனின் இந்த வரிகள் கேட்க இதமாகத்தான் இருக்கின்றன. ஆனால், நிஜ வாழ்க்கையில் புத்தகங்களைக் கேட்கிறார்களே என்று இரவல் கொடுத்து விட்டு, அப்புறமாக அதைக் கேட்டுப் பாருங்கள்! உண்மை நிலவரம் புரியும்! 
 

விஜய் டிவியில் கோட் கோபி நீயா நானா நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனும் விவாதத்தில்! அவர் எழுதிய புலிநகக்கொன்றை  புத்தகத்தை வாங்கிப் படிப்பதற்கு முன்னாலேயே நண்பர் இரவல் கேட்கக் கூட இல்லை, எடுத்துக் கொண்டுபோய்விட்டார். திருப்பிக் கேட்டபோது புத்தகம் திரும்பி வரவில்லை. விரோதம்தான் வந்தது. அந்தப் புத்தகம் என்னுடைய வாசிக்க நினைத்த புத்தகங்களில் இன்னமும் வாசிக்கப்படாமலேயே இருக்கிறது.என்பது நினைவுக்கு வரவே சோகத்தில் டிவியை அணைத்து விட்டு இங்கே வந்தாயிற்று! 

     

குடியரசு தினம் கொண்டாடுகிறோம்!  குடிமைப்பண்பு, பொறுப்பு இவைகளை அறிந்திருக்கிறோமா? வளர்த்துக் கொண்டிருக்கிறோமா?   

குடியரசுதின வாழ்த்துகள்!